எங்களுக்கு தமிழ் உணர்வு,தமிழ் பற்று இல்லையென யாரும் நினைக்க கூடாது.உண்மையான தமிழ் உணர்வு எங்களிடம் தான் இருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நான்காவது ஆண்டு நிறைவினையொட்டி தொகுதிகளுக்கான தேசிய மாநாடு நடைபெற்று வருகின்றது.
இதன் கீழ் பட்டிருப்பு தொகுதிக்கான தேசிய மாநாடு இன்று பெரியபோரதீவு கலாசார மண்டபத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் ,தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஸவின் வழிகாட்டலில் இந்த மாநாடு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்,பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ஸ, பொதுஜன பெரமுனவின் மகளிர் அணி தலைவி காந்தரூபா சந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பான பணியை முன்னெடுத்து வருபவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியவாறு பெருமளவானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.