ஆயுதப்போராட்டத்தால் பெருமளவில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பாயிஸ் கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் தொடர்பில் கனேடிய தமிழ் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட காணொளி தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச விவகாரங்கள் இயக்குநர் ஏ.எம்.பாயிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களது சக இனங்களின் உரிமைக்காக குரல் கொடுக்கல்விலை என்பதை ஏற்றுக் கொளவதுடன் ஒரு சில சமயங்களில் குரல் கொடுத்துள்ளனர் என்பதையும் கூறிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.