கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முதலீட்டுக்காக வழங்கப்படுவது இடைநிறுத்தப்படவில்லை என ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா தெரிவித்துள்ளார்.
வத்தளை ,கெரவலப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்திய நிறுவனம் மற்றும் ஜப்பானின் முதலீட்டு திட்டத்திற்காக துறைமுகத்தின் கிழக்கு முனையம் வழங்கப்படுவது கட்டாயம்.
பல்வேறு நபர்கள் குரைத்துக்கொண்டு வந்தாலும் அவை எவற்றுக்கும் அஞ்சி தீர்மானங்களை எடுக்க போவதில்லை எனவும் நிமல் லங்சா குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய அதானி நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கு துறைமுக ஊழியர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.