தற்போதைய அரசாங்கமும் படையினரை வேட்டையாடுகிறது:அஜித் பிரசன்ன

Report Print Steephen Steephen in அரசியல்
162Shares

இலங்கையின் தற்போதைய அரசாங்கமும் படையினரை வேட்டையாடி வருவதாகவும் ,அதற்கு சிறந்த உதாரணம் தன்னை சிறையில் அடைத்தது எனவும் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

இணையத்தள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

படையினர் வேட்டையாடப்படுவதற்கு எதிராக கட்டமைப்பு ஒன்றை உருவாக்க தற்போதைய அரசாங்கத்தினாலும் முடியாமல் போயுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களமும், குற்றவியல் விசாரணை திணைக்களமுமே என்னை சிறையில் அடைக்க திட்டமிட்டன.

ராஜபக்சவினர் தன்னை சிக்க வைத்தினர் என்று கூறுவது தவறு. பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் நான் மிகவும் நெருக்கமானவன். அவரது வீட்டில் வைத்து மேலாடை அணியாது கூறி கதைத்துள்ளார் எனவும் அஜித் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.