மக்களை பழிவாங்கவே அரசாங்கம் கொழும்பை தனிமைப்படுத்தியது - மரிக்கார்

Report Print Steephen Steephen in அரசியல்
73Shares

கொழும்பு நகரின் முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, மருதானை, மாளிகாவத்தை, தெமட்டகொடை, கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்கள் சுமார் மூன்று மாதங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்திக்கு இந்த பிரதேசங்களை சேர்ந்த மக்கள் வாக்களித்தமைக்கு பழிவாங்க அரசாங்கம் இதனை செய்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ள ஊசி மருந்தை இலங்கை இறக்குமதி செய்வதனால், அந்த அமைப்பின் பரிந்துரைக்கு அமைய கொரோனா தொற்றால் இறப்பவர்களின் சடலங்களையும் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.