ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கக்கூடிய சூழ்நிலையில் தற்போதைய நிலைமையில் தமிழர் தரப்பின் பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகள் பின்னடைவுகளாக மாறியிருக்கின்றன என்றவாறான கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில் தமிழர் தரப்பின் எதிர்பார்ப்புக்கள் உண்மையில் நிராசைகளாக மாற்றப்பட்டிருக்கின்றனவா?, இந்த பலவீனமான நிலைமைக்கு காரணம் என்னவாக இருக்கின்றது?, இந்த மனித உரிமைகள் சபையினுடைய அறிக்கையை தற்பொழுது கூட பலப்படுத்துவதற்கான கால அவகாசம் இருக்கின்றதா?, அதனை எப்படி தமிழர் தரப்பு கையாள வேண்டியிருக்கிறது? என்பன தொடர்பில் நீண்ட காலமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தமிழர்களின் மனித உரிமைகள் தொடர்பில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும், மனித உரிமைகள் ஆர்வலருமான எஸ்.வி.கிருபாகரன் பல உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.
இது தொடர்பில் அவர் விரிவாக வழங்கும் விளக்கம் காணொளியில்,