ஆறு நோய்களை ஒழிக்க முடிந்த எனக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை ஒழிக்க முடியாமல் போனது: ராஜித

Report Print Steephen Steephen in அரசியல்
243Shares

சுகாதார அமைச்சராக தான் பதவி வகித்த காலத்தில் ஆறு நோய்களை நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்க முடிந்தாலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை ஒழிக்க முடியாமல் போனதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை முன்னாள் ஜனாதிபதி தாங்கி பிடித்துக்கொண்டிருந்ததே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

நான் சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மலேரியா, யானைக்கால் நோய், ருபெல்லா நோய், தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் ஆஸ்துமா நோய், தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் எச்.ஐ.வி. எயிட்ஸ் நோய் போன்றவற்றை நாட்டில் இருந்து ஒழிக்க முடிந்தது. இது சம்பந்தமாக உலக சுகாதார அமைப்பு ஆறு சான்றிதழ்களை எனக்கு வழங்கியுள்ளது. ஆறு சான்றிதழ்களை பெற்ற ஒரே அமைச்சர் நானே.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை மாத்திரமே என்னால் ஒழிக்க முடியாமல் போனது எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.