ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பாதுகாப்பாக உள்ளதாகவும் எனினும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை பார்ப்பதற்காக இன்று அந்த சிறைச்சாலைக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் அவரது நலன்களை கேட்டறிந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.
தற்போதைய சட்டரீதியான நிலைமை குறித்து தெளிவுப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர், உடனடியாக ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்கு வரவழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சிறைச்சாலைக்குள் ரஞ்சன் ராமநாயக்கவின் உயிருக்கு பாரதூரமான ஆபத்து காணப்படுகிறது. இது குறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரஞ்சன் ராமநாயக்கவுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.