ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அரச தலைவராக தெரிவானால், இலங்கை ஆசியாவிலேயே பலமிக்க நாடாக மாறிவிடும் என அந்த கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்குதல்கள் தொடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
காலி கரந்தெனிய பிரதேசத்தல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இரண்டரை லட்சம் வாக்குகள் கிடைத்தன என்பதற்காக கட்சி சரிந்து விடாது. அது கட்சிக்கு கிடைத்த மிக பெரிய பலம் எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.