மனித உரிமைகள் பேரவையில் இலங்கை போரிடாமல் சரணடையாது! - வெளிவிவகார அமைச்சர்

Report Print Murali Murali in அரசியல்
368Shares

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை போரிடாமல் சரணடையாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இலங்கை தர்க்கரீதியான உண்மைகளுடன் மனித உரிமை பேரவையில் தனது கரிசனைகளை முன்வைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் தகவல்களில் உண்மைகள் சட்டத்தில் பிழைகள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது முற்றிலும் ஒரு நாட்டின் உள்விவககாரம், நீங்கள் இதனை செய்துள்ளீர்கள், ஏன் இதனை செய்தீர்கள்? என தெரிவிப்பதற்கு இன்னொரு ஸ்தாபனத்திற்கு என்ன உரிமையுள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன் காரணமாகவே நாங்கள் இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கின்றோம்.

நாங்கள் போரிடாமல் சரணடைவதற்கு தயாரில்லை, நாங்கள் காணாமல்போனவர்களின் அலுவலகம் தொடர்ந்தும் இயங்குவதை விரும்புகின்றோம், இழப்பீடு தொடர்பான அலுவலகத்தினை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு விரும்புகின்றோம்.

நாங்கள் நாட்டின் அனைத்து மனித உரிமை ஸ்தாபனங்களையும் தொடர்ந்து தக்கவைக்க விரும்புகின்றோம், அத்துடன் அவற்றை வலுப்படுத்தவும் விரும்புகின்றோம்.

நாங்கள் அவர்களிற்கு நிதி வழங்கவிரும்புகின்றோம், இந்த அமைப்புகளிற்கு ஆட்களை நியமிக்க விரும்புகின்றோம். 2021ம் ஆண்டிற்கான அவர்களின் செயற்திட்டத்தினை நாங்கம் கேட்டிருக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் மோதலில் ஈடுபட்டிருந்தோம், மோதலில் உயிரிழப்புகள் ஏற்படும், ஆனால் இறுதிருணங்களில் 70,000 பேர் கொல்லப்பட்டனர் என்றால் அவர்களின் உடல்கள் எங்கே எலும்புக்கூடுகள் எங்கே எதுவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.