பிரதமர் மற்றும் ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு

Report Print Steephen Steephen in அரசியல்
142Shares

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று பெந்தோட்டையில் நடந்துள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் சம்பந்தமாகக் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க, பிரதமரிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு நடந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இதற்கு அமைய ரணில் விக்ரமசிங்க கடந்த 13ஆம் திகதி பிரதமரைத் தொடர்பு கொண்டு மீண்டும் இது குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது தான் பெந்தோட்டையில் உள்ள பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இருப்பதாகவும் அங்கு வர முடிந்தால், தன்னுடன் மதிய உணவைச் சாப்பிட முடியும் எனப் பிரதமர் கூறியுள்ளார்.

இதனையடுத்து பெந்தோட்டை சென்ற ரணில் விக்ரமசிங்க, பிரதமருடன் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.