ஹக்கீம், ரிசாட் ஆகியோரை பாகிஸ்தான் பிரதமர் சந்திக்கவில்லை! காரணம் வெளியானது

Report Print Kamel Kamel in அரசியல்
781Shares

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியூதீன் ஆகியோருடனான, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சந்திப்பு ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது பற்றி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இந்த சந்திப்புக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டமையின் பின்னணியில் எவ்வித அரசியல் நோக்கங்களும் கிடையாது என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசாட், ஹக்கீம் ஆகியோருடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் இலங்கை அரசாங்கம் செயற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் விஜயம் குறித்த அனைத்து முக்கியமான தீர்மானங்களும் பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டமை குறித்து ரவூப் ஹக்கீம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டு டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.