அடுத்த தேர்தலில் கோட்டாபய சிங்கள பௌத்த வாக்குகளை பெற முடியாது - அத்துரலிய ரதன தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்
458Shares

இலங்கையில் பௌத்த சிங்கள வாக்காளர்களில் பெரும்பாலான வாக்குகளை பெற்றுக்கொண்டவர் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அந்த வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின், சிறுபான்மையின வாக்காளர்களை கவர்வது கட்டாயம்.

இதன் காரணமாக முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தேவையான வகையில் அரசாங்கத்தின் சில தீர்மானங்கள் மாற்றமடைகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் வெளியாகும் சிங்கள வாராந்த செய்திப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.