மொட்டுக் கட்சி மீது அதிருப்தி! தனி வழி செல்ல தயாராகும் சு.க.?

Report Print Rakesh in அரசியல்
83Shares

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயற்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மொட்டு அணியினரின் செயற்பாடுகளை வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றது.

தமது கட்சி உறுப்பினர்களுக்கு உரிய கவனிப்பு இல்லை எனவும், தேர்தலுக்காக மட்டுமே தமது கட்சி பயன்படுத்தப்படுகின்றது எனவும் சுதந்திரக் கட்சிக்கார்கள் ஊடகங்களிடம் தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது சஜித் அணியுடன் இணைந்து போட்டியிடவேண்டும், தற்போது ரணில் தரப்பு அவர்களுடன் இல்லை என்பதால் கூட்டணி சாத்தியமாகும் எனக் கட்சி உறுப்பினர்கள் சிலர், சு.கவின் மத்திய செயற்குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.

அத்துடன், மொட்டுக் கட்சியுடன் பேச்சு நடத்தி பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என மேலும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சு.கவுக்குள்ளும் கருத்து மோதல் வலுத்துள்ளது. விரைவில் தீர்க்கமானதொரு முடிவு எடுக்கப்படவுள்ளது என அறியமுடிந்தது.