பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் - பா.அரியநேத்திரனிடம் விசாரணை

Report Print Kumar in அரசியல்
21Shares

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸாரால் நேற்றைய தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு சம்மாந்துறை பொலிஸாரால் விசாரணை அழைப்பானை விடுக்கப்பட்டிருந்தது.

சம்மாந்துறை பொலிஸாரால் விசாரணைக்கு வருமாறு கொக்கட்டிச்சோலை பொலிஸ் ஊடாக அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் அனுமதிப்பத்திரங்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பானை விடுக்கப்பட்டிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.

இன்று மாலை 4.00மணிக்கு தான் சமூகம் கொடுத்து இரண்டு மணித்தியாலங்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்டது தொடர்பாகவும் எந்த வாகனத்தில் சென்றது எனவும் இந்த போராட்டத்தில் ஏன் கலந்துகொண்டது எனவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.