ஈஸ்டர் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான பொறுப்பை அரசாங்கம் ஏற்காது

Report Print Steephen Steephen in அரசியல்
82Shares

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சம்பந்தமான பொறுப்பை அரசாங்கமோ, ஜனாதிபதியோ ஏற்க போவதில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நீதி கிடைக்கவில்லை என்றால், இது சம்பந்தமாக அரசாங்கம், பயங்கரவாத விசாரணை பிரிவு மற்றும் குற்றவியல் விசாரணை பிரிவு ஆகியவற்றுக்கு அறிவித்து விசாரணை நடத்தும். ஆணைக்குழுவின் அறிக்கை ஒரு தரப்பினருக்கு பாதகமாக அமைந்துள்ளதாக கூறுகின்றனர். அது சுயாதீன ஆணைக்குழு. இது சம்பந்தமான பொறுப்பை கட்சியோ, அரசாங்கமோ, ஜனாதிபதியோ, பிரதமரோ, அமைச்சரவையோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவோ ஏற்காது. அதனை நாங்கள் நிராகரிக்கின்றோம் எனவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.