'தாமரை'யுடன் களமிறங்கும் விக்னேஸ்வரன்! - சிங்கள நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி

Report Print Rakesh in அரசியல்
737Shares

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளை மையப்படுத்தி 'தாமரை' சின்னத்தில் கட்சியொன்றை ஆரம்பிக்க வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்று சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சி இலங்கையிலும் நிறுவப்படும் எனத் தகவல் வெளியான நிலையில் அதற்கு விக்னேஸ்வரன் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே, தாமரை சின்னத்தில் விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.