உள்ளூராட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு சம்பள உயர்வு: அர­சுக்கு 12 கோடி செலவு

Report Print Samaran Samaran in அரசியல்

உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை 8,356 பேராக அதி­க­ரிக்­கப்­பட்­ட­மை­யி­னால் அரசாங்கத்திற்கு மாதம் 12 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு ஏற்­பட்­டுள்­ளதாக விளை­யாட்­டுத் துறை அமைச்­சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்துள்ளார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற குழுநிலை விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். மேலும் தெரி­விக்கையில்,

தேர்­தலை அவ­ச­ரப்­ப­டுத்­தும் நோக்­கில் அரச செல­வீ­னத்தை அதி­க­ரித்­துள்­ளார்­கள்.

4,484 உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­யும் போது ஒரு உறுப்­பி­ன­ருக்­கும் 3,000 ரூபாய் செலுத்தப்­பட்­டது.

ஆனால் தற்­போது ஒரு உறுப்­பி­ன­ருக்கு 15,000 ரூபாய் செலுத்த வேண்­டி­யுள்­ளது. பசில் ராஜ­பக்ஸ தலை­மை­யில் முன்­னெ­டுக்­கப்­பட்ட எல்லை நிர்­ண­யத்­தின்­படி 6,619 உறுப்­பி­னர்­கள் தெரிவு செய்­யும் வகை­யில் தயா­ரிக்­கப்­பட்­டது. அதற்கு சுமார் 10 கோடி ரூபா செல­வி­டும் நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கும்.

ஆனால் தற்­போது நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்ள உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கை­யின் பிர­கா­ரம் ஒரு மாதத்­திற்கு 12 கோடிக்கும் மேல் செல­விட வேண்­டி­யுள்­ளது. இந்த பணத்­திற்­கும் எங்கு போவது என்­றார்.