ஜப்பானிய சக்கரவர்த்தியை இன்று சந்தித்த மைத்திரி!

Report Print Samaran Samaran in அரசியல்

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் அழைப்பை ஏற்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன இன்று ஜப்பானிய சக்கரவர்த்தி அக்கி ஹித்தோவையும், பேரரசி மிச்சிக்கோவையும் அவர்களது அரன்மனையில் இன்று சந்தித்துள்ளார்.

நாளை ஜப்பான் பிரதம மந்திரி ஷின்சோ அபே மைத்திரிக்கு வரவேற்பு அளிப்பார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மைத்திரி ஜப்பானில் வாழும் இலங்கை சமூகத்தவர்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவார். தொடர்ந்து ஜப்பானிய வர்த்தக சமூகத்தவர்களுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

இலங்கை மீது தாக்கம் செலுத்தக்கூடிய அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் குறித்து ஜப்பானிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

இந்த விஜயம் இலங்கைக்கு கூடுதலான அனுகூலங்களைத் தருவதாக அமையும் என ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் தெரிவித்தார்.