தமிழரின் பலத்தை உலகிற்கு காட்ட த.தே.கூ தலைமைகள் போட்ட அதிரடி திட்டம்! வெற்றியளிக்குமா?

Report Print Samaran Samaran in அரசியல்

நாட்டில் நிலவிவரும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில் தமிழ் மக்களின் ஒற்றுமை பலத்தை வெளியுலகிற்கும் சிங்கள தலைமைகளுக்கும் எடுத்துக் காட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் புதிய திட்டமொன்றை வகுத்துள்ளனர்.

அன்மையில் ஐ.தே.கட்சியின் நல்லாட்சி அரசாங்கம் கவிழ்ந்த நிலையில் தனது பலத்தை காட்ட ஐ.தே.கட்சி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது.

அதே போல் த.தே.கூட்டமைப்பு தான் தமிழ் மக்களின் ஏகோபித்த மக்கள் பிரதிநிதிகள் என்பதை நிரூபணம் செய்து கூட்டமைப்பில் பலத்தை சர்வதேசத்திற்கு எடுத்துரைப்பதற்கு கூட்டமைப்பின் தலைமைகள் திட்டமிடுவதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழரசுக்கட்சி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் மாபெரும் இளைஞரணி மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாட்டினை தொடர்ந்து கூட்டமைப்பின் பலத்தை நிரூபிக்கவும் தமிழரின் ஒற்றுமையை வெளிக்காட்டவும் வடக்கு கிழக்கு இணைந்ததாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய உத்தேசித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பு கூட்டமைப்பின் இரண்டாம் கட்ட இளம் தலைவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.