கரைச்சியில் இராணுவத்தினரிடம் இருந்த கட்டடம் உரியவர்களிடம் கையளிப்பு

Report Print Suman Suman in வீடு காணி

கிளிநொச்சி ஏ 35 வீதி கோரக்கன் கட்டுப்பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த கரைச்சி வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டடம் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் படையினரின் பயன்பாட்டில் இருந்து வருவதனால் அதன் உரிமையாளர் கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நல்லாட்சி அரசினால் கணிசமான நிலங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் கிளிநொச்சி ஏ 35 வீதி கோரக்கன் கட்டுப்பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும்மேலாக இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த பலநோக்குகூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான மூன்று ஏக்கர் காணி மற்றும் அரிசியாலைக்கு சொந்தமான கட்டடங்கள் உரிய நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த காணி கட்டடங்கள் கரைச்சி வ டக்கு பலநோக்குகூட்டுறவுச் சங்கபணியாளர் களால் இன்று துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

Comments