வலிவடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு விரைவில் மின்சாரம்

Report Print Vino in வீடு காணி

கீரிமலையில் வலி வடக்கு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்கும் திட்டம் தற்போது முன்னெடுத்து வரும் நிலையில், 50 வீடுகளுக்கு மின்சார விநியோகம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மின்சாரசபை தெரிவித்துள்ளது.

மேலும் இராணுவத்தினரால் குறித்த வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 140 வீடுகளின் பணிகள் நிறைவடையும் நிலையினை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இடத்தில் உள்ள 50 வீடுகளுக்கு விரைவில் மின்சார விநியோகம் வழங்கப்படும் என மின்சார சபை கூறியுள்ளது.

மின்சாரக் கம்பங்களை நடும் பணி ஆரம்பமாகிய நிலையில் இன்னும் சில வாரங்களில் குறிக்கப்பட்ட 50 வீடுகளுக்கும் மின்சார விநியோகம் ஆரம்பித்து விடும் என்று மின்சாரசபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...

Comments