வாழைச்சேனை கிண்ணையடி மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் நடைபெற்ற சங்காபிசேகம்

Report Print Reeron Reeron in மதம்

மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபஷ பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் நடைபெற்றதையடுத்து சங்காபிசேகம் இன்று (3) பெரும் திரளான பக்தர்களின் மத்தியில் இடம்பெற்றது.

ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகமானது கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற நிலையில் இன்றைய நாள் சங்காபிசேகம் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற சங்காபிசேக பூஜையில் ஆலயத்திற்கு அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். அனைத்து கர்மாரம்ப அனைத்து கிரியைகளையும் இந்துமத குருபீடாதிபதி சிவாகமஞானி அருள்ஜோதி ஸ்கந்த சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை கிண்ணையடி மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக அனைத்து கிரியைகால விசேட நிகழ்வுகளுக்கும் லங்காசிறி ஊடக அணுசரனை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

Comments