மட்டக்களப்பு வந்தாறுமூலை புகழ்பெற்ற நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் வரலட்சுமி விரதமானது மிகவும் சிறப்பான முறையில் இன்று இடம்பெற்றது.
வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற பூஜையில் சுமார் 600க்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு, பூஜை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
வந்தாறுமூலை, கொம்மாதுரை, வாகரை, சித்தாண்டி, மாவடிவேம்பு போன்ற கிராமங்களில் இருந்து வருகைத்தந்த பெண்கள் இந்த பூஜையில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.