வடக்கையும் கிழக்கையும் பௌத்த மயமாக்கவே இராணுவம் முனைகின்றது!

Report Print Mohan Mohan in மதம்

வடக்கையும் கிழக்கையும் பௌத்த மயமாக்கவே இராணுவம் முனைகின்றது. அதன் அடிப்படையில் தமிழத்தாயகப் பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயச் சூழலில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை தொடர்பான பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நோக்கில் அவர் அங்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த விகாரைக்குள் செல்வதற்கு இராணுவம் அனுமதிக்கவில்லை என்றும் விகாரைக்கு பாதுகாப்பாக நிரந்தர வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் காவல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விகாரை கட்டடுமானங்கள் தொடருமாயின் சில காலத்தில் தமிழர்களது கலாசாரம் அழிக்கப்பட்டு, தமிழர்கள் என்றொரு இனம் இங்கு வாழ்ந்துள்ளதா என்ற கேள்வி எழும் நிலை உருவாகும் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments