இந்தியாவிற்கு யாத்திரை சென்ற இலங்கையர் மாயம்!

Report Print Ajith Ajith in மதம்

இலங்கையில் இருந்து யாத்திரைக்காக சென்ற முதியவர் ஒருவர் புதுடில்லி விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக புதுடில்லி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சுமார் 60- 70 வயது மதிக்கத்தக்க மஹியங்கனையை வசிப்பிடமாகக்கொண்ட ராமநாயக்க முதியான்சலாகே ஜெயசேகர என்பவர் யாத்திரிகர்கள் சிலருடன், கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் இருந்து இந்திரா காந்தி விமான நிலையத்தில் இறங்கியுள்ளார்.

மாலை 6.45 அளவில் இவர் 80பேரைக் கொண்ட யாத்திரிகர் குழுவுடன் டி-3 ஒழுங்கையில் நின்றபோதும் பின்னர் காணாமல் போனதாக முறையிடப்பட்டது.

இறுதியாக அவர், 18 இலக்க வாயில்படியில் நின்றமையை சீசீடிவியின் மூலம் அவதானிக்க முடிந்துள்ளது. எனினும் அதன் பின்னர் அவரை காணமுடியவில்லை.

இந்தநிலையில் அவர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர் என்பதுடன் ஆங்கிலமோ, ஹிந்தியோ பேசத்தெரியாதவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments