நாடளாவிய ரீதியில் சிறப்பாக இடம்பெற்ற புனித ஹஜ் பெருநாள் நிகழ்வுகள்

Report Print Karan in மதம்

யாழ்ப்பாணத்தில்...

யாழ்ப்பாணம் - ஜின்னா மைதானத்தில் முஸ்லிம் வட்டார மக்களுக்கான பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் மௌலவி அப்துல் அஸீஸ் (காசிமி) தலைமையில் நடைபெற்றது.

அத்துடன் யாழ்ப்பாணம் பூங்காவிற்கு முன்னால் இருக்கும் யாழ் மாநகர மைதானத்தில் தௌஹீத் ஜமாத் அமைப்பின் பெருநாள் தொழுகை அஷ்-ஷெய்க் பைசல் (மதனி) தலைமையில் நடைபெற்றது.

இப்பெருநாள் தினமானது இறை தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

வசதிபடைத்த முஸ்லிம்கள் இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா சென்று மார்க்கக் கடமைகளில் ஈடுபடுவார்கள்.

உலகின் சகல பாகங்களில் இருந்தும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா மாநகரில் மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளை கடந்து இலட்சக் கணக்கானவர்கள் ஒன்றுகூடி ஹஜ் வழிபாடுகளில் ஈடுபடுவது இந்த தினத்தின் விசேட அம்சமாகும்.

திருகோணமலையில்...

திருகோணமலை மாவட்டத்தில் ஈதுல் பித்துர் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் விமர்சையாக நடைபெற்றன.

இதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

வவுனியாவில்...

ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி வவுனியா குடா வயல் திடலில் விசேட தொழுகை வழிபாடுகளில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.

வவுனியா தவ்ஹீத் ஜமாத் ஏற்பாட்டில் இடம்பெற்ற இத்தொழுகையினை மௌலவி இ.எல். றதீம் (மீசானி) நடத்தியிருந்தார்.

இதன்போது இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அனைவரும் கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்ததுடன் பெருநாள் வாழ்த்துக்களையும் ஒருவருக்கொருவர் தெரிவித்தனர்.

மலையகத்தில்...

மலையகத்தில் முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் பண்டிகையியை விசேட தொழுகையில் ஈடுப்பட்ட பின்னர் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.

அந்தவகையில் ஹற்றன் நகரில் பிரதான ஜூம்மா பள்ளிவாசலில் ஹற்றன் முஸ்லிம் மக்கள் விசேட ஹஜ் பெருநாள் தொழுகையிலும் பிராத்தனைகளிலும் ஈடுப்பட்டிருந்தனர்.

பிறகு தமது பண்டிகையை முஸ்லிம் மக்கள் சந்தோஷமாக கொண்டாடினார்கள்.

வாழைச்சேனையில்...

உலக முஸ்லிம்கள் “ஈதுல் அல்ஹா” ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நிருவாகம் ஏற்பாடு செய்த திறந்த வெளியிலான பெருநாள் தொழுகையும் குத்பாப்பேருரையும் வாழைச்சேனை அந்நூர் தேசிய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களைச் சேர்ந்த பெருந்திறளான ஆண்கள் கலந்து கொண்டனர்.

பெருநாள் தொழுகையையும் குத்பா பேருரையையும் மௌலவி அஷ்ஷேக் ஏ.ஜி.எம்.றிஸ்வி நடாத்தி வைத்தார்.


Latest Offers

loading...

Comments