இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்றது.
சின்ன கதிர்காமம் என போற்றப்படும் மண்டூர் கந்தசுவாமி ஆலயம் இலங்கையின் படைவீடுகளில் ஒன்றாக இந்துக்களினால் கருதப்படுகின்றது.
கடந்த பதினெட்டு தினங்களாக நடைபெற்று வந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் இன்று மண்டூர் முருகன் தீர்த்தக்கேணியில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
தமிழர்களின் பண்டைய கலாச்சாரத்தினையும் மரபினையும் பேணி காக்கும் வகையில் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது.
தீர்த்தோற்சவம் நிறைவு பெற்றதும் ஆலயத்திற்கு சுவாமி வீதியுலா வரும்போது தெய்வானையம்மன் ஆலயத்திற்கு முன்பாக சிறுமிகள் மங்கள ஆரத்தி எடுக்கும்போது மயங்கி விழும் அற்புதக்காட்சி பண்டைய காலம் தொடக்கம் இன்றுவரை இந்த ஆலயத்தில் நடைபெற்றுவருகின்றமை சிறப்பம்சமாகும்.
இந்த ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம் தலைமையில் இந்த தீர்த்தோற்சவம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.