தேரர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்

Report Print Kumutha Kumutha in மதம்

18 வயதுடைய தேரர் ஒருவர் இன்று பிற்பகல் அடையாளம் தெரியாத நபர்களினால் வான்ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெல்தெனிய-வேகல பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

ஆயுதங்களை காட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்து குறித்த தேரர் கடத்திச்செல்லப்பட்டதாகவும், பின்னர் இடைநடுவில் கடத்திச் சென்ற வானில் இருந்துதள்ளிவிட்டு சென்றுள்ளதாகவும் தேரர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னர் தேரர் பஸ்ஸில் ஏறி தெல்தெனிய நகருக்கு வந்துவைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாககுறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers

loading...

Comments