கொழும்பு - கிரேன்பாஸ் புனித சூசையப்பர் ஆலயத்தில் நேற்று (08) அன்னை மரியாளின் அமலோற்பவ தின வழிபாடுகள் இடம்பெற்றது.
குறித்த ஆலயத்தில் திருவழிப்பாடுகள் நடைபெற்றதுடன் அன்னை மரியாள், தனது தாய் அன்னம்மாள் வயிற்றில் கருவான நாளும், கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் மீட்பு கிடைத்த நாளும் இதுவே என கூறப்படுகின்றது.
இதேவேளை, அன்னை மரியாளை கிறிஸ்தவர்கள் அனைவரும் போற்றிப் புகழ்பாடியுள்ளனர்.
அன்னை மரியாளுக்கு உரிய இத்தினம் கடன் திருநாள் என அழைக்கப்படுகின்றது.
மேலும், இந்த திருவழிப்பாட்டில் மரியன்னைக்கு திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டதுடன் இறையடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.