வெள்ளிக்கிழமையான இன்று விஷேட பூஜை வழிபாடுகள் கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது.
குறிப்பாக வெள்ளிக்கிழமையான இன்று ராகுகால விஷேட பூஜையானது துர்கை அம்மனுக்கு சிறப்பான ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண்கள் தாலி பாக்கியம் வேண்டியும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவன் அமைய வேண்டியும் இந்த பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.