ஸ்ரீ சபரிமலை சாஸ்தா பீட விஷேட ஐயப்பன் பூஜை

Report Print Akkash in மதம்
66Shares

ஸ்ரீ சபரிமலை சாஸ்தா பீடம் நடத்திய விஷேட ஐயப்ப பூஜை இன்றைய தினம் (09) கொழும்பில் கமலா மோடி மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.

48 நாள் மண்டலம் விரதம் இருந்து ஐயப்பன் தரிசனத்துக்காக சபரிமலை நோக்கி செல்வதற்கான முதற்கட்ட அம்சமாக விஷேட பூஜைகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

சிறப்பு யாகம், ஹோம வழிபாடு, சிறப்பு பஜனைகள் என்பன வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. மேலும், சங்காபிஷேகம், திரவிய பூஜை என்பனவும் இடம்பெற்றது.

இதேவேளை, குறித்த பூஜை வழிபாடுகளில் ஐயப்பன் அருள் வேண்டி ஐயப்ப பக்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments