திருமுழுக்கு நாளினை முன்னிட்டு இன்று அனைத்து கிருஸ்தவ தேவாலயங்களிலும் பூஜைகள் செய்யப்படுகின்றன.
அந்தவகையில் இன்று காலை கொழும்பு சென் ஜோசப் தேவாலயத்திலும் பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த பூஜை வழிபாடுகள் அருட்தந்தை லின்டன் தலைமையில் நடைபெற்றது.
இந்த பூஜையின் போது கிருஸ்தவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.