உலகத்தமிழர்கள் அனைவராலும் இன்றைய தினம் வெகு சிறப்பாக தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதேவேளை கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் வெகு சிறப்பாக பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற தோடு மக்களின் நலன் வேண்டி சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன.
ஆலயத்தின் வாசலில் பொங்கல் பொங்கி விசேடமாக கொண்டாடப்பட்ட இந்நிகழ்விலே பெருமளவான பக்தர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.