புனித யோசேவாஸ் அடிகளார் இலங்கை நாட்டின் புனிதராக பிரகடனப்படுத்தி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் கொழும்பு கொச்சிகடை ஆலயத்தில் இன்று(14) சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது.
குறித்த வழிபாட்டில் புனித யோசேவாஸ் அடிகளாரின் உருவ சிலை புனித லூசியாஸ் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இதன்போது, இலங்கை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் 2017 ஆம் ஆண்டு புனித யோசேவாஸின் வருடமாக பிரகடப்படுத்தப்பட்டது.
மேலும் இந்த இறைவழிபாட்டில் கிறிஸ்தவர்கள் அனைவரும் பக்தியுடன் கலந்து கொண்டு இறைவனின் ஆசீர்வாதத்தையும் கொடையையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.