கோறளைப்பற்று பிரதேச செயலக ஏற்பாட்டில் பொங்கல் விழா

Report Print Navoj in மதம்

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா இன்று பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் இடம் பெற்ற பொங்கல் விழா நிகழ்வில் பிரதேச பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு, பிரதேச செயலகத்தினால் மாற்று திறனாணி ஒருவருக்கு சக்கர நாட்காலி ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

பொங்கல் பூஜை மற்றும் வறட்சி நீங்க விசேட பூஜை மற்றும் வழிபாடுகள் இதன்போது இடம் பெற்றது.

இப்பூஜைகளை கறுவாக்கேணி மாரியம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.எஸ்.கண்ணன் குருக்கள் நடாத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Comments