சித்தாண்டி முருகன் கோயில் கண்காணிப்போடி குடித் திருவிழாவின் திருவிளக்கு பூஜை

Report Print Reeron Reeron in மதம்

வரலாற்று சிறப்பு மிக்க சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஆறாம் திருவிழாவில் விசேட பூஜைகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போது கண்காணிப்போடிக் குடித் திருவிழாவில் திருவிளக்குப் பூஜை விசேடமாக நடத்தப்பட்டுள்ளது.

திருமணம் செய்து கொண்ட நூற்றுக் கணக்கான பெண்கள் ஆசார சீலர்களாக வருகை தந்ததுடன்,கண்காணிப்போடி குடியினரின் ஏற்பாட்டின் போது திருவிளக்குப் பூஜை, வசந்த மண்டப பூஜை, சுவாமி உள் வீதி உலா மற்றும் வெளி வீதியில் சப்பரத்தில் எம் பெருமானார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கியுள்ளார்.

கண்காணிப்போடி குடியினரின் திருவிழாவின் போது சுவாமி உள் வீதி உலா மற்றும் வெளி வீதி வலம் வருகையில் திருவிளக்கு ஏந்திய பெண்கள், பக்தி கீர்த்தனைகள் பாடும் குழுவினர்கள், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எம்பெருமானர் வீதி உலா வருகின்ற வர்ண ஜல தீப்பந்தம் போன்ற சிறப்பம்சங்களும் இடம்பெற்றன.

கடந்த 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிரம்மோற்வ பிரதம குரு சிவஸ்ரீ கைலாசநாத வாமதேவக் குருக்கள், ஆலய ஸ்தானிக குரு சிவஸ்ரீ உலகநாத புஸ்பராஜ் குருக்கள் தலைமையில் இந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

எதிர்வரும் 03 திகதியில் இருந்து 05 ஆம் திகதி வரையான உற்சவமானது இந்த கோயிலின் தெய்வீக சிறப்பம்சத்தை பண்டைய காலம்தொட்டு இன்று வரை போற்றி வழிபட்டு விழாவெடுக்கும் மயில்கட்டுத் திருவிழா உற்சவம் இடம்பெறவுள்ளது.

மேலும், ஸ்ரீ சித்திர வேலாயுதரின் இறுதி நாள் தீர்த்தோற்சவமானது எதிர்வரும் செப்டம்பர் 06 ஆம் திகதி புதன் கிழமை சித்தாண்டி உதயன்மூலையில் அமைந்துள்ள சரவணப் பொய்கையின் பிரணவத் தீர்த்தத்துடன் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா நிறைவடையவுள்ளது.