வண்ணை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஆலய கொடியேற்றம்

Report Print Thamilin Tholan in மதம்

யாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று(12) முற்பகல் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளுக்கு விசேட அபிஷேக பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசையும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சூரிய பரிதிச் சேவை எனப்படும் சூரிய ஒளிப்பிரகாசத்துடன் சீதேவி, பூமாதேவி சமேதரராக ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் உள்வீதி வலம் வந்தார்.

ஆலயப் பிரதம குரு பிரம்ம ஸ்ரீ ரமனீஸ்வர குருக்கள் தலைமையில் காலை பத்து மணியளவில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றதுடன், தொடர்ந்து பக்தர்கள் புடை சூழ சுவாமி வெளிவீதியுலா வந்தார்.

இவ்வாலய மஹோற்சவம் தொடர்ந்து பத்துத் தினங்கள் காலை மற்றும் மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 30ஆம் திகதி காலை தேர்த் திருவிழாவும், மறுநாள் காலை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

இன்றைய கொடியேற்ற உற்சவத்தில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு தமது இறையருளைப் பெற்றிருந்தனர்.