70ஆவது ஆண்டு நிறைவில் தென்னிந்திய திருச்சபை

Report Print Yathu in மதம்

தென்னிந்திய திருச்சபையின் 70ஆவது ஆண்டு சிறப்பு வழிபாடு வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள தலைமை திருச்சபையில் இன்றைய தினம் இடம்பெற்றது.

தென்னிந்திய திருச்சபையின் பேராயர், கலாநிதி டானியல் செல்வரத்தினம் தியாகராஜா தலைமையில் குறித்த விசேட ஆராதனை இடம்பெற்றது.

இதன்போது உதவி குரு அபிசேகம் இடம்பெற்றது, தொடர்ந்து முறிகண்டி, அம்பாறை திருச்சபையினரது விசேட பாடல்கள் இடம்பெற்றதுடன் ராயரினால் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டது.

குறித்த வழிபாட்டின்போது, இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள குருவானவர்களும், திருச்சபை பங்கு மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தென்னிந்திய திருச்சபை உருவாகி 70 ஆண்டுகளை பூர்த்தி அடைந்தமையை முன்னிட்டு இன்றைய சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றதோடு, அமெரிக்கன் இலங்கை மிசனரிகளால் உருவாக்கப்பட்ட திருச்சபைகளை பொறுப்பேற்று தென்னிந்திய திருச்சபை பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

யாழ்ப்பாண கல்லூரி மற்றும் உடுவில் மகளிர் கல்லூரி ஆகியன அமெரிக்கன் மிசனரிகளால் உருவாக்கப்பட்டு தென்னிந்திய திருச்சபையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.