நம்முள் சேர்ந்துள்ள, தீய வினைகளை அகற்றிவிட்டு நல்வினைகளை சேர்க்கத் தூண்டும் நாளே விநாயகர் சதுர்த்தி எனக் கூறப்படுகிறது.
இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த விரதத்தின் மகிமையை அறிந்து வைத்திருத்தல் அவசியமாகும். விநாய சதுர்த்தி விரதத்தை கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக விரதத்தை கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம்.
இவ்வாறான நாட்களில் மேற்கொள்ளப்படும் விரதங்களால் உள்ளம் மேன்மை அடையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் அருள் புரிவதாக தெரிவிக்கப்படுகிறது.
பார்வதி தேவி இந்த விரதத்தை அனுஸ்டித்து சிவனை அடைந்ததாக கூறப்படுகிறது.
பல சிறப்புக்கள் பொருந்திய இந்த விநாயக சதுர்த்தி தினங்களில் ஆலயங்கள் தோறும் விசேட பூஜைகள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டுகின்றன.
அந்த வகையில், இன்று கொழும்பு -13 கொட்டாஞ்சேனை விநாயகர் ஆலயத்திலும் சிறப்பான பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.