புத்தாண்டை வரவேற்கும் இலங்கை வாழ் மக்கள்

Report Print Akkash in மதம்

மலர்ந்துள்ள 2018ஆம் ஆண்டை முன்னிட்டு இந்து ஆலயங்களிலும், தேவாலயங்களிலும் சிறப்பான பூஜைகளும் இடம்பெற்றன.

கொழும்பு -13 இல் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் ஆலயத்தில் இன்று காலை விஷேட பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன.

இதேவேளை, கொழும்பு - புனித லூசியஸ் தேவாலயத்தில் விஷேட ஆராதனைகளும் இடம் பெற்றதுடன், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு புத்தாண்டினை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றார்கள்.

வருடத்தின் முதல் நாள் திங்கட்கிழமையுடன் ஆரம்பமாவதுடன் இன்று போயா தினமாகும். இலங்கை வாழ் மக்களுக்கு இன்று பொதுவாக விடுமுறை நாளாகவே காணப்படுகின்றது.

இதை முன்னிட்டு அனைத்து மதத்தினரும் வணக்கஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers