சிதம்பரத்துக்குக் கப்பல் வழிப் பயணம்

Report Print Akkash in மதம்

சிதம்பரத்துக்கு இந்து அடியவர்கள் கப்பலில் வழிபாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள இலங்கை இந்திய அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளதாக கொழும்பு இந்து சமய கலாச்சார அலுவலகத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தக் கப்பல்ப் பயணத்தில் சிதம்பரம் வழிபட்டு மீண்டும் திரும்பி வர விரும்பும் அடியவர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் உள்ள இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் தற்காலிகப் பணிமனையில் அலுவலக வேலை நேரத்தில் கடவுச்சீட்டினையை காட்டிப் பதிவு செய்து கொள்ளவும்.

கப்பல் புறப்படும் இடம்,புறப்படும் நாள்,நேரம் மற்றும் கப்பல் கட்டண விவரங்கள் காலப்போக்கில் அறிவிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளது.

Latest Offers