மலையகத்தில் சிறப்பிக்கப்பட்ட தைத்திருநாள்

Report Print Thirumal Thirumal in மதம்

தமிழ் மாதத்தின் முதலாம் திகதியான தைப்பொங்கல் உலககெங்கிலும் வாழ்கின்ற தமிழர்களால் இன்றைய தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், கொட்டகலை வூட்டன் ஹில்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதான குருக்கள் தலைமையில் தைப்பொங்கல் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர்.

நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து இந்நாளில் வழிபடுவார்கள்.

ஆண்டுதோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers