வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேகம்

Report Print Sumi in மதம்

ஈழத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த வடக்கு வாயில் கோபுர மகா கும்பாபிஷேகம் இன்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பல நூற்றுக் கணக்கான அடியவர்கள் சூழ கும்பங்கள் வீதியுலா வந்து கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் இடம்பெற்றது.

இதேவேளை, கும்பாபிஷேக வழிபாடுகளில் இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜன், யாழ். மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன், ஆளுநரின் செயலாளர் சட்டத்தரணி எல்.இளங்கோவன், பேராசிரியர் என்.சண்முகலிங்கன் மற்றும் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் பங்கேற்று அம்பாளின் அருளைப்பெற்றனர்.

Latest Offers