மட்டக்களப்பு எருவில் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பர் சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற மஹா கும்பாபிஷேகம்

Report Print Kumar in மதம்

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு ,எருவில் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பர் சுவாமி ஆலயத்தின் புனராவர்த்தன, அஷ்டபந்தன, பஞ்சகுண்டபக்ஸ, பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேகம் இன்றைய தினம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

சர்வதேச இந்துமதகுருபீடாதிபதி ஆன்மீக அருள் ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் கடந்த 31ஆம் திகதி மஹா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகியது.

இன்று காலை புண்ணியாகம், யாகபூஜை, அஷ்டோத்திர சதநாக ஹோமம், மகாபூர்ணாகுதி, தீபாராதனை, வேதஸ்தோத்திர பாராயணம், உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஸ்தூபி மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

இதேவேளை, இந்த நிகழ்வுகளில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.