மலையகத்தில் சிறப்பாக நடைபெற்ற மஹா சிவராத்திரி

Report Print Thirumal Thirumal in மதம்

உலகளாவிய ரீதியில் இந்துக்கள் மஹா சிவராத்திரி விரதத்தினை பக்திபூர்வமாக நேற்றைய தினம் அனுஷ்டித்துள்ளனர்.

அந்த வகையில், இலங்கையிலும் அனைத்து இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளன.

மலையகத்தில் அக்கரப்பத்தனை ஹோல்புறுக் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலும், சிவராத்திரி நிகழ்வுகள் பக்திபூர்வமாக இடம்பெற்றன.

அக்கரப்பத்தனை பிரதேச வாழ் இந்துக்கள் பெருமளவில் இந்தப் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

இரவு முழுவதும் ஆலயத்தில் தங்கியிருந்து விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்று இறைவனின் சித்திகளைப் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, கலை நிகழ்வுகளும் விசேட ஆன்மீகச் சொற்பொழிவுகளும் நடைபெற்றன.

Latest Offers