கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பிக்கப்பட்ட சிவராத்திரி

Report Print Nesan Nesan in மதம்

சிவராத்திரியை முன்னிட்டு கிழக்கிலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றிரவு பூஜைகள் இடம்பெற்றுள்ளன.

நேற்றிரவு முழுவதும் சிவனை நோக்கி விரதமிருக்கும் அடியார்கள் பலரும் பூஜைகளிலும் கலை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில்தான்தோன்றீஸ்வரருக்கு விசேட அபிசேகம் செய்யப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

நான்கு சாமங்கள் தான்தோன்றீஸ்வரருக்கு நடைபெற்ற இந்த விசேட பூஜை வழிபாடுகளில் நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் வருகைதந்து பங்கேற்றனர்.

அத்துடன் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆலய சூழலில் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள் - குமார்

Latest Offers