தவக்கால முதல் நாளான திருநீற்றுப் புதனை கொண்டாடும் கிறிஸ்தவர்கள்

Report Print Akkash in மதம்

தவக்காலத்தின் முதல் நாளான இன்றைய தினம் கிறிஸ்தவர்களால் திருநீற்றுப் புதன் விழாவாக கொண்டாடப்படுகிறது. திருநீற்றுப் புதனிலிருந்து 46ஆம் நாளில் உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும்.

பொதுவான கிரகோரியன் கிறித்தவ நாட்காட்டிப்படி, இயேசுவின் உயிர்த்தெழுதல் ஒரு குறிப்பிட்ட திகதியில் கொண்டாடப்படுவதில்லை.

மாறாக, மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில வரும் முழுநிலா நாளையொட்டி வருகின்ற ஞாயிறு அவ்விழா நிகழும். இது பண்டைய யூத மரபுப்படி அமைந்த பாஸ்கா விழா கணிப்பை அடிப்படையாகக் கொண்டது.

விபூதிப் புதன் என முன்பும், இப்பொழுது திருநீற்றுப் புதன் எனவும் வழங்கப்படுகின்ற விழா நாளில் கிறித்தவர்கள் புனிதப்படுத்தப்பட்ட சாம்பலைத் தம்மீது தடவிக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் திருநீற்றுப் புதன் இன்று கொழும்பு - 13 புனித லூசியஸ் தேவாலயத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

Latest Offers