ஐயனாரும், ஐயப்பனும் ஒருவரேதான்: வேறு வேறு அல்ல

Report Print Nesan Nesan in மதம்

ஐயனாரும், ஐயப்பனும் ஒருவரேதான் என்பதில் எவரும் ஐயம் கொள்ளத்தேவையில்லை என ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி எருவில் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்த்தான புனராவர்த்தன அஷ்ட பந்தன பஞ்சகுண்ட பிரதிஷ்டா மகா கும்பாபிசேகம் கடந்த 31.01.2018ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று காலை 1008 மகா சங்காபிசேக பெருவிழாவும், பாற்குடபவனியும் நடைபெற்றது.

இந்த சங்காபிசேக நிகழ்வு பிரதிஷ்டை, பிரதம சிவாச்சாரியார் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலை குரு முதல்வர் சிவாகம கலாநிதி ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியாரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஐயப்பன் வேறு ஐயனார் வேறு அல்ல. ஐயப்பன் என்பவர் நித்திய பிரமச்சாரியாக இருப்பவர்.

ஆகவே ஐயனாரும், ஐயப்பனும் ஒருவரேதான் என்பதில் எவரும் ஐயம் கொள்ளத்தேவையில்லை. தங்களது காரண காரியங்களுக்காக தங்களது உடலுருவங்களில் மாற்றமேற்படுகின்றதே தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதனை அனைத்து அடியார்களும் புரிந்து கொண்டிருப்பது கட்டாயமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers