கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் சிங்கள மொழியிலும் திருப்பலி ஆராதனை

Report Print Sumi in மதம்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இம்முறை திருப்பலி ஆராதனை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருவிழாவிற்கு இம்முறை இலங்கையில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை இந்தியாவில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் கச்சத்தீவு திருவிழாவில் முதல் முறையாக தமிழ் மொழியுடன், சிங்கள மொழியிலும் திருப்பலி ஆராதனை நடத்தப்படவுள்ளது.

அந்த வகையில் சிங்களத்தில் திருப்பலி ஆராதனையை மேற்கொள்ள காலி மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்ரமசிங்க நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திருவிழாவிற்கு செல்லக்கூடிய பக்தர்களிடம் அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியமாக இருக்க வேண்டும் எனவும், விழாவில் பங்கு கொள்வதற்கு இலங்கை அகதிகளுக்கு அனுமதி கிடையாது எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers